சக்திவேலின் பாலருவி கவிதை
அருமை நண்பர்களே ,
அருவி அழைக்கிறது ,
வாருங்கள் பாலாறு பலாப்பழம் தின்று மகிழ்ந்து
குற்றால வானரமாகி
மந்திகளை கண்டு மகிழ்ந்து
ரஹமத்தில் உண்டு மகிழ்ந்து
கும்பாருட்டியில் ஜட்டி உறுவி அருவியில் உருண்டு புரண்டாடி கேரளத்தில் வெள்ளாப்பமும் மீன்கறியும்
தென்மலையில் தென்னங்கள்ளும்
இன்னும் எத்தனையோ
கொண்டாட்டம் காத்திருக்கு
இன்னும் இரண்டே வாரம் தான்
ஒடிவிடும் நாட்கள்
தயாராகு புறப்பட தயாராகு
புரட்டியெடுக்க தயாராகு
இதற்கு ஜெயக்குமாரின் பதில் கவிதை :
சக்திவேல்!!!!
அருமை, அருமை, மிக அருமை
ஆரம்பமே ஆனந்தம்,
இந்த இன்பமே
ஈடேற
உண்டு ஊன்
எடுத்து ஏற்றமில்லா
ஒற்றுமையுடன்
ஓங்கி (செழித்தோங்கி)
ஐக்கியமாகுங்கள்
மந்தி மயங்கும் மாலை வேளையின் குற்றால தேன்மலையலே…..
கவிதை அருவியாய் அழைத்து, உள் ஆடைஉருவி,
வாருங்கள் என்று பாலாறு பலாச்சுழைகளை தின்று, மகிழ்ந்து,
குற்றாலத்தில் (நிர்)வாண(ம்)ரமாகி,
கேரளத்தின் வெள்ளப்பங்களை கண்டும் அதில் மீன்களை விட்டு விளையாடி உண்டு,
புரட்டி, உருட்டியெடுக்க அழைக்கும் நீதான்டா நண்பா இயற்கை அன்னையின் உன்னதமான புதல்வன்….
