தென்மலை – பாலருவி அழைப்பு : கவிதை – சக்திவேல்
நேற்று கோவை குற்றாலம் கதிகலங்க வைத்தது மழை மலை இரண்டின் பிரம்மாண்டம் அடடா அடடடா கொள்ளை அழகு
நேற்று இரவிலிருந்தே கர்பஸ்திரி போல் கோவை , எப்போது வேண்டுமானாலும் கடும் மழை கொட்டிவிடும் போல் பயம் காட்டிய சிறு தூறல் நடனம் இன்னும் முடியவில்லை
நம்ம குற்றாலம் கிளம்ப இன்னும் நடுவில் இரண்டே கிழமை
நம்மை வரவேர்க்க ,
ஆர்ப்பரிக்கும் இயற்கை கொடை அருவி வெள்ளம் கிளம்பிவிட்டது
கண்டிப்பாக அருவிக ளில் தண்ணீருடன் கூட்டமும் அலைமோதும்
நமக்கு கோபால் அருவி ஒரு வரம் , என்ன கொஞ்சம் செலவு , ஆனால் கொண்டாட்டம் கியாரண்டி
தங்கும் இடம் தங்கம்
உணவு ஏற்பாடுகள் பாலசுந்தர கடவுள் ஆறு படைவீடுபோல் ஆறு ஏழு இடங்களில் ஆர்டர் செய்து நம் மீது அன்பு அருள்பாலிக்கிறார்
குளியல் தண்ணீர் ப்ரச்சனை தீர்ந்தது
அந்த தண்ணீர் ப்ரச்சனையும் முடிந்தது
நண்பா இனி கிளம்ப வேண்டியது ஒன்றே பாக்கி
செயின் மோதிரம் தவிர்த்திடு
மாரியிடம் காச ஒப்படைச்சிடு
சார்ட்ஸ் துண்டு எடுத்துக்க
வேன்ல ஏறி குந்திக்க
30 June சந்திப்போம்
